Main Menu

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது.

உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, போரில் கைதுசெய்யப்பட்ட வீரா்கள் தலா 205 பேரை ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் வெள்ளிக்கிழமை திரும்ப ஒப்படைத்தன.

இதையடுத்து நேற்றையதினம் 528 பேரின் உடல்களை உக்ரைனிடம் ரஷ்யா அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் ரஷ்யா நேற்று இரவு முதல் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

இதில் 5 மாடி கட்டடம் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

ஒலே கைபா் எனும் இடத்திலுள்ள துறைமுகம் பலத்த சேதமடைந்தது.

ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்திய தகவலை உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதேவேளை, இரவு முழுவதும் 294 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 269 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதேபோல், ரஷ்யாவும் தங்களது 14 பிராந்தியங்களில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 138 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.