உதவி வழங்கல் – நன்றிக் கடிதம்
கிளிநொச்சி உதயநகர் மேற்கை சேர்ந்த கருணாமூர்த்தி தாருஷன் (வயது 20) என்ற மாணவனுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்திய நிலையில் மாற்று சிகிச்சை செய்வதற்கு உதவி கோரப்பட்டது.
குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.த உயர தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இயன்ற உதவியாக பிரான்சில் வசிக்கும் அன்ரி அம்மா பிள்ளைகள் ஒரு இலட்சம் ரூபாயை அந்த மாணவனின் சிகிச்சைக்கு வழங்கி உள்ளனர்.