Main Menu

35 டன் எடையிலான கஞ்சா கடத்தல்: பலநாட்டு அதிகாரிகளின் உதவியுடன் மடக்கிபிடித்த ஸ்பெயின் அதிகாரிகள்

ஸ்பெயினில் கடத்தப்பட்ட 35 டன் எடையிலான கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக, ஸ்பெயினின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 24-28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஒன்பது பல்கேரியர்களையும் ஒரு ரஷ்யரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 5 மில்லியன் யூரோக்கள் (5.9 மில்லியன் டொலர்கள்) மதிப்புள்ள ஆறு படகுகளை பறிமுதல் செய்ததாகவும பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னர் வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 5 டன்களைத் தவிர, நான்கு படகுகளில் 30 டன் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை கடல் வழியாக (ஸ்பெயினுக்கு) கடத்தலை மேற்கொள்ளும் குழுவுக்கு பெரும் அடியாகும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், யூரோபோல், சர்வதேச கடல்சார் பகுப்பாய்வு மற்றும் செயற்பாட்டு மையம் மற்றும் ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, பல்கேரியா, கிரேக்கம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் அதிகாரிகளிடமிருந்து விசாரணையின் போது உதவி கிடைத்ததாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

இதுவே கடல் வழியாக நடந்த மிகப் பெரிய போதைப் பொருள் பறிமுதல் என அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

பகிரவும்...