Main Menu

தமிழ் மக்களை இழிவாகப் பேசிய பொலிஸ் பொறுப்பதிகாரி?

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் பரிசோதகருமான பிரசாத் பெர்னாண்டோ, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று மன்றுரைத்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நாள் நினைவுகூரலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் விண்ணப்பம் மீதான விசாரணையின் பொதே இந்த கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையை மீறி வடக்கு மாகாண மக்களை இழிவாகப் பேசுகிறார். 10 ஆண்டுகளாக மக்களின் பிரதிநிதியாக இருக்கும் நான் வடக்கு மக்களைப் பேசுவதற்கு இவர் யார் எனக் கேட்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

இதனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கண்டித்த மன்று, அவரைக் கட்டுப்படுத்தியது.

பகிரவும்...