Main Menu

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்த பட்ச வயதெல்லையை நிர்ணயித்தது ஐ.சி.சி!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நிர்ணயித்துள்ளது.

ஆடவர் மகளிர் ஐ.சி.சி. போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இளம் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

அதேசமயம் ஓர் அணி நினைத்தால் எந்த வயதிலும் ஓர் வீரரை அறிமுகப்படுத்த முடியும். அதற்கு ஐசிசியிடம் அந்த அணி அனுமதி பெறவேண்டும்.

அசாதாரணமான சூழலில் 15 வயதுக்குட்பட்ட வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ஐசிசியிடம் விண்ணபிக்க வேண்டும். அந்த வீரரின் அனுபவம், மனநிலை, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி போன்றவற்றை ஐசிசிக்குத் தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஹசன் ராஸா, 14 வருடங்கள் 227 நாள்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி சாதனை படைத்தார். அவர் 1996ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஏழு டெஸ்டுகள், 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

பகிரவும்...