Main Menu

நடிகர் பிரபு தேவா இரகசிய திருமணம்?

நடிகர் பிரபுதேவா இரகசியமாக திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவை விவாகரத்து செய்த பிரபு தேவா, தற்போது  பிசியோதெரபி வைத்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் அவருடைய  அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே வந்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சல்மான் கானை வைத்து ராதே எனும் இந்தி திரைப்படத்தை இயக்கி வரும் பிரபுதேவா அந்த பணிக்காக மும்பையில் கடந்த சில மாதங்களாக தங்கி வந்தார். அப்போது அவருக்கு முதுகுவலி காரணமாக பிசியோதெரபி மருத்துவரிடம் சென்றதாகவும் அந்நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...