Day: August 5, 2020
துயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)
தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி இரத்தின சிங்கம் (நீலா ரீச்சர், ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்கள் 4ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றமேலும் படிக்க...
ஐக்கிய அரபு இராச்சியம், அஜ்மனில் பாரிய தீ விபத்து!
ஐக்கிய அரபு இராச்சியம், அஜ்மனில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணியளவில் எமிரேட்ஸில் உள்ள ஈரானிய சூக்கில் (Iranian Souq) இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படும் நிலையில் பாரிய தீ பரவலாகமேலும் படிக்க...
வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு இரு அடுக்கு விசேட பாதுகாப்பு- பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கை நிறைவுபெற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் நிலையங்களில் உட்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்மேலும் படிக்க...
தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை பதிவு- ஜனாதிபதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு
கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
பெயிரூட் வெடிப்பு சம்பவம்: வீடுகளை இழந்து இரண்டு இலட்சம் மக்கள் தவிப்பு!
லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால், பல கட்டடங்கள் சேதமாகியுள்ள நிலையில், சுமார் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக பெயிரூட்டின் ஆளுநரான மர்வான் அபாத் தெரிவித்துள்ளார். 200,000 முதல் 250,000பேர் வரை வீடுகளை இழந்துவிட்டதாகவும், அவர்களுக்கு உணவு,மேலும் படிக்க...
2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!
நாடு முழுவதும் மதியம் 05 மணி வரையான காலப்பகுதியில் 70 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார், அந்தவகையில் ஹம்பாந்தோட்டை 76% மொனராகலை 75% மாத்தளை 72% பொலன்னறுவை 72% கண்டி 72% இரத்தினபுரி 71%மேலும் படிக்க...
பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தனதாக்கும்- டலஸ் அழகப்பெரும
பொதுஜன பெரமுன பாரிய வெற்றியடையும். இதனை நாளை வெளியிடப்படுகின்ற தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துமென அக்கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளதாவது, “விகிதாசாரமேலும் படிக்க...
தேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த
பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டுமேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தைக் கடந்தது!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக ஏழு இலட்சத்து நான்காயிரத்து 365பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உலக அளவில் கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
பெயிரூட் வெடிப்பு சம்பவம்: 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு, 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தூண்டியுள்ளது என்று ஜேர்மனியின் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மத்தியதரைக் கடலில் 200 கிலோமீட்டர் (180 மைல்) தொலைவில் சைப்ரஸ் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நகரின்மேலும் படிக்க...
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா
அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ரீதியானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “நாளை அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர்மேலும் படிக்க...
பிரான்சில் எக்கணமும் கொரோனாத் தொற்று கடடுப்பாட்டை மீறலாம் – விஞ்ஞானக்குழு எச்சரிக்கை
மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் கொரோனாத் தொற்றின் கட்டுப்பாடு எக்கணமும் மீறப்பட்டு, நிலைமை தலைகீழமாக மாறலாம். கொரோனாத் தொற்றானது கட்டுப்பாட்டை மீறி எக்கணமும் பிரான்சில் மிக மோசமாகப் பரவலாம்» எனப் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு COVID19 பாதுகாப்பு நெறிமுறைகளிற்கான ஆலோசனைகள் வழங்கும் விஞ்ஞானமேலும் படிக்க...
பொது தேர்தல் – இராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு
இலங்கையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் பாதுகாப்பிற்காக 82091 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேடமேலும் படிக்க...
தேர்தல் நாளில் அநுராதபுரத்தில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொல்லப்பட்டுள்ளார். அநுராதபுரத்தில் கடந்த2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்டே சாம்பியனான வசந்தசொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என்பவரே இந்த சம்பவத்தில்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம் பெற்றுவரும் வாக்களிப்பு
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதில் இருந்து பரவலாக வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதை அவதானிக்கமேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன் வைத்துள்ள அவசர கோரிக்கை
வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டை ஒளிப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு சிலர் வாக்குசீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை,மேலும் படிக்க...
தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் வாக்களித்துள்ளேன் – இரா.சாணக்கியன்
தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் தாம் வாக்களித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில்மேலும் படிக்க...