Main Menu

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ரீதியானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “நாளை அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை வாய்ந்தது. சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியானது.

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவையே கடவுள் ராமரின் சாராம்சமாகும். ராமர் மற்றும் அன்னை சீதையின் அருளால் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. கடவுள் ராமர் அனைவரிடத்திலும் இருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தியின் இந்த டுவிட்டர் பதிவு கட்சியின் நிலைப்பாட்டையே மாற்றியதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 100 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இவ்விழாவுக்கு காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...