Main Menu

தேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த

பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொண்ட நாடாளுமன்றத்தின் தேவை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், இவற்றை விடவும் கடுமையான சவால்களை தாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான மக்கள் ஆர்வத்தைபாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு 6.9 மில்லியன் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் திட்டம் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பகிரவும்...