Main Menu

பிரான்சில் எக்கணமும் கொரோனாத் தொற்று கடடுப்பாட்டை மீறலாம் – விஞ்ஞானக்குழு எச்சரிக்கை

மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் கொரோனாத் தொற்றின் கட்டுப்பாடு எக்கணமும் மீறப்பட்டு, நிலைமை தலைகீழமாக மாறலாம். கொரோனாத் தொற்றானது கட்டுப்பாட்டை மீறி எக்கணமும் பிரான்சில் மிக மோசமாகப் பரவலாம்» எனப் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு COVID19 பாதுகாப்பு நெறிமுறைகளிற்கான ஆலோசனைகள் வழங்கும் விஞ்ஞான ஆலோசனைக் குழு (Conseil scientifique) எச்சரித்துள்ளது.

மிக முக்கியமான, பாதுகாப்பு இடைவெளிகள் பேணப்படாமல் போனால், மிகவும் ஆபத்தான நிலைமை தோன்றலாம். கொரோனாத் தொற்றைக் குறுகிய காலத்தில் அழிப்பதும், மிகவும் மோசமாகப் பரவச் செய்வதும் மக்களின் கைகளிலேயே உள்ளது. இதனை அரசாங்கம் மிகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தவேண்டும் எனவும் இந்த விஞ்ஞானஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த விஞ்ஞான ஆலோசனைக் குழு, எதிர்வரும் இலையுதிர்காலத்திற்குள், அல்லது குளிர்கால ஆரம்பத்திற்குள், மிகவும் மோசமான இரண்டாவது கொரோனாத் தொற்றலை பிரான்சைத் தாக்கும் என உறுதியாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிரான்சில், உணவகங்களிலும், பல்பொருள் அங்காடிகளிலும், விடுமுறை இடங்களிலும், கடற்கரைகளிலும், மக்கள் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, பாதுகாப்பு இடைவெளிகள் எதுவுமின்றியே நடந்து கொள்கின்றனர். அரசாங்கம் இதனைக் கண்டு கொள்ளாமலேயே இருக்கின்றது.

பகிரவும்...