Main Menu

அமெரிக்க சிறு வர்த்தகர்களுக்குப் பயனளிக்கும் சட்ட வரைபில் ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்க சிறு வர்த்தகர்கள் தமக்கான நிவாரண கடன் தொகைக்காக விண்ணப்பிக்கும் இறுதி திகதியை நீடிப்பது தொடர்பான சட்ட வரைபில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (சனிக்கிழமை) கையெழுத்திட்டுள்ளார்.

அதனடிப்படையில், குறித்த கடனுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்வதை தடுப்பதற்குமான குறித்த கடன் உதவித்திட்டம், கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஐந்து வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த திட்டத்துக்காக காங்கிரஸ் கட்சியினால் வழங்கப்பட்ட 659 பில்லியன் டொலர் தொகையில் ஏறக்குறைய 130 பில்லியன் டொலர் தொகை மீள வழங்கப்படும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த தொகையினை அமெரிக்காவின் சிறு வர்த்தகர்களுக்கு பகிர்ந்து வழங்குவதில் அதிகாரிகள் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என விமர்சகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவைரஸ் பெருந்தொற்றால் உலகளாவிய ரீதியில் அதிகளவான சுகாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...