Main Menu

அமெரிக்காவில் முப்பது இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அமெரிக்காவில் தொடர்கதையாக நீண்டுகொண்டே செல்கிறது.

நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் அமெரிக்காவில் தினமும் பலர் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்து வருகின்றனர்.

இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை நெருங்குகிறது.

அதனடிப்படையில் இன்று வரை 29 இலட்சத்து 35 ஆயிரத்து 770 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.  இதேவேளை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 320 பேரளவில் குறித்த வைரஸ் காரணமாக அங்கு உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் காரணமாக அங்கு குணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில், 12 இலட்சத்து 60 ஆயிரத்து 400க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

எனினும் இதுவரை குறித்த பாதிப்புகளை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க அரசாங்கத்தால் முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...