Main Menu

முடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடிய இங்கிலாந்து மக்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் நாடளாவிய முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் முதன்முறையாக மக்கள் இரவில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரவுப்பொழுதை இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கத்தின் போது மூடப்பட்டிருந்த பொழுதுபோக்கு மையங்களான களியாட்ட விடுதிகள், மதுபான மற்றும் உணவு விடுதிகள் சிகையலங்கார மையங்கள் மற்றும் தியேட்டர்கள் மீளத் திறக்கப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இடங்களில் மக்கள் புழக்கம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதிகளில், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் மக்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பிலான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் இங்கிலாந்தின் பெரும்பாலான கட்டடங்களில் பூரண மின் விளக்குகளை ஒளிரவிட்டுள்ளனர்.

மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வண்ணம் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் தமது வீடுகளின் ஜன்னல் பகுதியில் விளக்குகளை ஒளிரவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த நடவடிக்கையானது முழுமையான பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியது என மருத்துவ அதிகாரிகளால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பகிரவும்...