Main Menu

ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்

கொரோனா வைரஸ் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் கிரியாக்கோஸ் மிற்சோரேக்கிஸ் ( Kyriakos Mitsotakis ) இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கிரீஸ் நாடானது பலவகையில் மேம்பட்டுவிட்டது. நாம் எமது நாட்டின் சொந்த மீளுருவாக்கத்தில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையான பொருளாதார நடைமுறைகள் போதுமானவை. மேலதிக இறுக்கமான கட்டுப்பாடுகள் தேவையற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான 3.5 பில்லியன் யூரோவுக்கான புதிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவித்த்திருந்தார்.

ஏறக்குறைய தசாப்த கால கடன் நெருக்கடியில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு மீண்ட கிரீஸ், 2020ம் ஆண்டு பாரிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தது.

எனினும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முடக்கம் காரணமாக அவை அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...