Day: March 10, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்புப் பதிவாகியுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரி டொக்ரர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். வடக்கு வன்கூவர் நேர்சிங் ஹோமில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 80வயதான நபர் மூன்று நாட்களுக்கு முன்புமேலும் படிக்க...
சபரிமலைக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை
கேரளாவில் 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கோயில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மெல்லப் பரவி வருவதுடன் இதுவரை 44மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த இஸ்ரேல் முடிவு!
உலகினை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டிலிருந்து தமது நாட்டுக்கு வரும் அனைவரையும் கட்டாயமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். பலதரப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது கடினமான முடிவு என்றாலும் சமூகத்தின்மேலும் படிக்க...
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா தொற்று – இலங்கையர்கள் இருவருக்கும் பாதிப்பு!
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதிதாக பாதிக்கப்பட்ட 15 பேரில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அங்கு தற்போது 74 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில்மேலும் படிக்க...
“கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை… வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளை மறுதினம்” – சிவாஜிலிங்கம்
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வு
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,412ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 286 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர்மேலும் படிக்க...
ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் : மருத்துவ அதிகாரி ஜெனி ஹரீஸ்
பிரித்தானியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் ஜெனி ஹரீஸ் (Dr Jenny Harries) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினால் இங்கிலாந்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர், 321 பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா,மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் பொது நிகழ்வில் ஹரி – மேகன் கலந்துகொண்டனர்
சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தமது கடைசிப் பொது நிகழ்வில் கலந்துகொண்டனர். இன்று திங்கள்கிழமை பிற்பகல் வெஸ்ற்மின்ஸ்ரர் அபேயில் நடைபெற்ற பொதுநலவாய தினதிற்கான சிறப்பு வழிபாட்டில் ராணி மற்றும் அரச குடும்பத்தின் ஏனையமேலும் படிக்க...
ஆப்கானில் இரண்டு ஜனாதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் உள்நாட்டு போர் உருவாகும் அபாயம்?
ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளதால், அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரப் கானி, நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுக்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்தி: 27பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்திகளுக்குப் பின்னர் ஈரானில் மெத்தனால் அருந்திய இருபத்தேழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்களை காவு கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மது அருந்தலாம் என்ற வதந்தி கடந்த சிலமேலும் படிக்க...
கூட்டமைப்பை ரணில் ஏமாற்றியது உண்மைதான்- சீ.வி.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர்மேலும் படிக்க...
நடிகர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த வருடம், ஜூன் 23ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிமேலும் படிக்க...
‘வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்’ – மட்டக்களப்பில் போராட்டம்
தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ்மேலும் படிக்க...
போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – பா.டெனிஸ்வரன்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றினைமேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 08/03/2020

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர்கள் நால்வரில் ஒருவராக பணியாற்றி தனது பதவியை இராஜினாமா செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன் அவர்களை தமிழரசு கட்சி வேட்டபாளராக நியமித்தமைக்கு அக் கட்சி சார்ந்த மகளிர் அணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பான பார்வை மற்றும் சமகாலமேலும் படிக்க...