Main Menu

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வு

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,412ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 286 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார்.

இதில் 10 பெண்களும் 15 ஆண்களும் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 21 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், அவர்கள் முன்னதாகவே வேறு நோய்களுடன் இருந்தவர்கள் எனவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொற்றுக்கு உள்ளானவர்களில் 66 பேர் தற்போது மிக மோசமான உடல்நலத்துடன் இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஹொட்-ரின், ஓய்ஸ் மற்றும் க்ரீசெஸ் ஆகிய நகரங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மொத்தமாக 300,000 மாணவர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

பகிரவும்...