Main Menu

அரச குடும்பத்தின் பொது நிகழ்வில் ஹரி – மேகன் கலந்துகொண்டனர்

சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தமது கடைசிப் பொது நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இன்று திங்கள்கிழமை பிற்பகல் வெஸ்ற்மின்ஸ்ரர் அபேயில் நடைபெற்ற பொதுநலவாய தினதிற்கான சிறப்பு வழிபாட்டில் ராணி மற்றும் அரச குடும்பத்தின் ஏனைய மூத்த உறுப்பினர்களுடன் அவர்கள் இணைந்துகொண்டனர்.

ஹரி – மேகன் இருவரும் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து விலகுவதற்கு முன்னர் பிரித்தானியாவில் தொடர்ச்சியான பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

மார்ச் 31 முதல், அவர்கள் தமது அரச குடும்பத்தின் (HRH) தலைப்புகளைப் பயன்படுத்துவதையும் பொதுப் பணத்தைப் பெற்றுக்கொள்வதையும் நிறுத்துகின்றனர்.

மத்திய லண்டன், கதீட்ரலில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் பொதுநலவாய அமைப்பின் தலைவரான வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் – கோர்ன்வோல் சீமாட்டி கமிலா மற்றும் கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் சீமாட்டி கேற் ஆகியோருடன் ஹரி – மேகன் இணைந்துகொண்டனர்.

அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து தாம் விலகுவதாக ஜனவரி மாதம் அறிவித்த பின்னர் அவர்கள் இருவரும் அரச குடும்பத்தின் மற்றைய உறுப்பினர்களுடன் தோன்றியது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்வின் பின்னர் அவர்கள் தமது மகன் ஆர்ச்சியுடன் கனடாவிற்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது வருங்கால மனைவி கரி சிமன்ட்ஸுடன் கலந்துகொண்டார்.

Thanks BBC

பகிரவும்...