Main Menu

2020 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள ஐ.நா.வின் முக்கிய காலநிலை மாநாடு!

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் முக்கிய காலநிலை மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் பிரெஞ்சு தலைநகரில் இரண்டு வார பேச்சுவார்த்தைகளில் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய பரிஸ் ஒப்பந்தம் எட்டப்பட்டதன் பின்னர் இடம்பெறும் ஐ.நா மாநாட்டின் மிக முக்கியமான சுற்று இதுவாகும்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி வந்த காலநிலை ஆர்வலர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக திட்டமொன்றை வடிவமைப்பதற்காக இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் உலகெங்கிலுமிருந்து சுமார் 30000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...