Day: December 11, 2019
குடியுரிமை சட்டத் திருத்த வரைபு மடமைத் தனமானது: இளம் இந்தியா இதை மாற்றும் – கமல்

இந்தியாவை ஒருசாரர் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமையானது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இந்த திட்டங்கள் பலிக்க இது பாமர இந்தியா அல்ல எனத் தெரிவித்துள்ள அவர், இளம் இந்தியா விரைந்து குடியுரிமை சட்டமேலும் படிக்க...
சஜித் தலைவரானால் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு பாரிய வெற்றி கிட்டும் – திஸ்ஸ
சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிப்பதன் ஊடாக, பொதுத் தேர்தலில் இந்தக் கட்சி பாரிய வெற்றியடையக் கூடிய சந்தரப்பங்கள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.மேலும் படிக்க...
யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவி
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய 300 மில்லியன் ரூபாயை உதவித் தொகையாக இந்தியா வழங்கவுள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறைமேலும் படிக்க...
இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம்
மியான்மாரில் சிறுபான்மையின மக்களை இனப் படுகொலை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார். மியன்மார் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
மனித உயிர்களை கொலை செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது – கொழும்பு பேராயர்
மனித உயிர்களை கொலை செய்யவோ அடக்கியாளவோ எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்கக்கூடாது என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் என்றமேலும் படிக்க...
இன்று நான்கில் ஒரு TGV, பத்தில் ஒரு TER
இன்று புதன்கிழமை 11 ஆம் திகதியும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் கடந்த நாட்களை விட இன்று போக்குவரத்து முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய ஏழாவது நாள் வேலை நிறுத்தத்தில் TGV மற்றும் TER சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு TGV சேவைகள்மேலும் படிக்க...
நீண்டகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – நஃப்டா ஒப்பந்தம் கையெழுத்தானது
சர்ச்சைக்குரிய நஃப்டா ஒப்பந்தம் தொடர்பாக நீண்டகாலமாக காணப்பட்டுவந்த முரண்பாட்டுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் புதிய ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நீடித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மூன்று நாடுகளுக்கிடையில் கடைசிமேலும் படிக்க...
மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கைது
மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Genaro Garcia Luna கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் கடத்தல் குழுவிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மன்னனான Elமேலும் படிக்க...
நித்தியானந்தா காலில் விழுந்து வணங்கும் முக்கியஸ்தர்?
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வெளிநாடுக்குச் தப்பிச் சென்றுள்ள நித்தியானந்தாவின் காலில் விழுந்து வணங்கும் முக்கியஸ்தர் யார்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘சுவாமி நித்தியானந்தா நாட்டை விட்டு புறப்பட முடிவெடுத்தபோது, அமித்ஷா அவரை பிடித்து கொண்டு விட மறுத்த தருணம்’மேலும் படிக்க...
“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் ”
சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தலைப்பில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் வரை நடைப்பயணம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார். இன்று காலை 8 மணியளவில் மாதாகல் சங்கமித்த விரையில் இருந்து தனது தாயின் ஆசீர்வாதத்தோடு நடைமேலும் படிக்க...
தவறான ஆலோசனைகள் வழங்குபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் – முருந்தெடுவே ஆனந்த தேரர்
அரசியல் ரீதியில் தவறான ஆலோசனைகள் வழங்குபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டும். 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு ஒரு தரப்பினரது தவறான செயற்பாடுகளே பிரதான காரணியாக காணப்பட்டது. மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தில் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் கடுமையானமேலும் படிக்க...
தமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்த மகாகவியின் பிறந்ததினம் இன்று

“வீழ்வேன் என நினைத்தாயோ” என மரணத்திற்கே சவால் விடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு இன்று பிறந்த நாள். தமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, எளிமையாக உருவாக்கி புதிய பாதையை அமைத்தவர் எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் பாரதியார். எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும்மேலும் படிக்க...
பாரதி பிறந்த நாளுக்கு மோடி தமிழில் வாழ்த்து
தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று கூறிய மகா கவிஞர் பாரதியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார். தமிழ் கவிஞரும், எழுத்தாளரும், விடுதலை போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்த நாள் இன்று. அவரின்மேலும் படிக்க...
“ மகாகவி பாரதியார் “

பாட்டிற்கு ஒரு புலவன் பைந்தமிழ் பாவலன் முண்டாசுக் கவிஞன் முறுக்கு மீசைக்காரன் சிந்துக்கும் தேசீயத்திற்கும் சந்தக்கவிகள் தந்தவர் எட்டையபுரத்தில் உதித்தாரே மார்கழித் திங்கள் பதினொன்றிலே ! மாடனை, வேடனை, காடனை அடக்கினார் தன் கவிக்குள் வீட்டிற்குள் முடங்கிய பெண்களை வேகமாய் கூவியழைத்தார்மேலும் படிக்க...