Day: December 9, 2019
பிரியங்கர பெர்ணாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து இறுதி தீர்மானம்
பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது. இதற்கமைய பெரும்பாலும் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாகமேலும் படிக்க...
500 மில்லியன் பயணங்களை மேற்கொண்ட வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்தது
பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள வந்த குறித்த ரயில் நேற்று (சனிக்கிழமை) சேவையை நிறுத்திக் கொண்டது. எனினும், இந்த வெர்ஜின்மேலும் படிக்க...
புதிய ஓய்வூதிய சீர்திருத்தம் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்! – தொழிற் சங்கத் தலைவர்
டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என CGT தொழிற்சங்க பொதுச் செயலாளர் அறிவிற்றுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்திரிரை ஒன்றுக்கு பேட்டியளித்த CGT தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் Philippe Martinez இதனை தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 ஆம்மேலும் படிக்க...
பரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண்!
பரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண் ஒருவரை தீயணைப்பு படையினர் பலத்த போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் பரிஸ் 14ஆம் வட்டாரத்தில் உள்ள Denfert-Rochereau Avenue வீதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. பரிசில் உள்ள சுரங்கக் கண்காட்சிச் சாலையான Catacombsமேலும் படிக்க...
யாழில் இரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு
யாழ்ப்பாணத்தில் இரண்டரை மாத கைக்குழந்தையொன்று கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 11.30மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் குறித்தமேலும் படிக்க...
சௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலக நாடுகள் வரவேற்பு
சௌதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும்மேலும் படிக்க...
மரண தண்டனையை அமுல் படுத்துவதற்கான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த தடையுத்தரவை எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையைமேலும் படிக்க...
எந்த பெண்ணும் பலாத் காரத்துக்கு இனி ஒருபோதும் ஆளாகக் கூடாது- தமிழிசை
எந்த பெண்ணும் பலாத்காரத்துக்கு இனி ஒருபோதும் ஆளாகக் கூடாது. இதை ஆளுநராக அல்ல ஒரு சகோதரியாக கேட்கிறேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழிசைமேலும் படிக்க...
அரசியலில் எந்த நடிகரும் வெற்றி பெற முடியாது- கே.எஸ்.அழகிரி
அரசியலில் எந்த நடிகரும் வெற்றி பெற முடியாதென தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்!
நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள ‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந் நாட்டுமேலும் படிக்க...
அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப் படவில்லை – அருட்தந்தை சக்திவேல்
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை, நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுப்பதற்கு தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட் தந்தை ம.மேலும் படிக்க...
ஐ.நா.பிரேரணையிலிருந்து அரசு விலகிவிடும்; சர்வதேச உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது – ஜி.எல்.பீரிஸ்
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமான பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும். எதிர்வரும் மார்ச் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாக இதுவாகவே காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதுமேலும் படிக்க...