Main Menu

ஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது – ஜி.எல்.பீரிஸ்

ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் பிர­கா­ர­மான  பொறுப்புக்கூறல் கடப்­பாட்டிலிருந்து இலங்கை முழு­மை­யாக வில­கிக்கொள்ளும். எதிர்­வரும்  மார்ச்  கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு முழு­மை­யாக இது­வா­கவே காணப்­படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் ஜி.எல்.பீரிஸ்  தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

ஐக்­கிய தேசிய கட்­சியை 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு கொண்டு வரு­வ­தற்கு உதவி புரிந்த சர்­வ­தேச அமைப்­புக்கள், மேற்­கு­லக நாடு­களை திருப்­திப்­ப­டுத்தும் வித­மா­கவே ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. இப்­பி­ரே­ர­ணை­க­ளுக்கு கடந்த அர­சாங்­கத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் பதவி வகித்த முன்னாள் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும், பாரா­ளு­மன்­றத்­திற்கும் அறி­விக்­காமல் பொறுப்பு கூறல் விட­யத்­திற்கு தான்­தோன்­றித்­த­ன­மாக இணக்கம் தெரி­வித்தார்.

ஜெனிவா   மனித உரிமை பேர­வையில்  இலங்கை அர­சாங்கம் பொறுப்பு கூறலை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை கிடை­யாது.  ஏனெனில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் சர்­வ­தே­சத்தில் எமது நாட்டு இறை­யாண்­மை­யினை காட்டிக் கொடுப்­ப­தா­கவே கரு­தப்­படும்.எமது நாட்­டுக்கு முற்­றிலும் மாறுப்­பட்ட வித­மா­கவே பிரே­ர­ணையின் உள்­ள­டக்­கங்கள் காணப்­ப­டு­கின்­றது.

பொறுப்பு கூறல் விட­யத்­திற்கு  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு  எவ்­வ­கையில் அழுத்­தங்­களை சர்­வ­தேச மட்­டத்தில் இருந்து பிர­யோ­கித்­தாலும் அது பய­ன­ளிக்­காது. எந்த உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு இணக்கம் தெரி­வித்தும்  புதிய அர­சாங்கம் தோற்­று­விக்­கப்­ப­ட­வில்லை. என்­பதை அனை­வரும் புரிந்துக் கொள்ளல் அவ­சி­ய­மாகும்.

நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­களில் இருந்து அர­சாங்கம் விலகிக் கொள்ளும்  நிலைப்­பாட்­டிலே அர­சாங்கம் உள்­ளது.  மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணை­யினை கொண்டு வந்த  அமெ­ரிக்கா  பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை  மனித உரிமை பேர­வைக்கு எதிராக முன்வைத்து விலகிக் கொண்டது.பொறுப்புக் கூறல் விடயத்தில் இருந்து  அரசாங்கம் விலகிக் கொள்வதால் சர்வதேச உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அனைத்து நாடுகளுடனும்   நல்லுறவினை தொடர்ந்து பேணுவோம் என்றார்.

பகிரவும்...