Main Menu

மரண தண்டனையை அமுல் படுத்துவதற்கான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தடையுத்தரவை எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த முன்னாள் ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு மீதான வழக்கின் விசாரணை, மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஜூலை மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் செயற்பாட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...