Main Menu

பரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண்!

பரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண் ஒருவரை தீயணைப்பு படையினர் பலத்த போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் பரிஸ் 14ஆம் வட்டாரத்தில் உள்ள Denfert-Rochereau Avenue வீதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

பரிசில் உள்ள சுரங்கக் கண்காட்சிச் சாலையான Catacombs எலும்புக்கூட்டுக் கண்காட்சிச் சுரங்கத்துக்குள்ளேயே குறித்த இளம் பெண் சிக்கிக்கொண்டுள்ளார்.

பெண்ணொருவர் தீயணைப்புப் படையினரை அழைத்து, தமது தோழி சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னரே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

சில மீற்றர்கள் ஆழத்தில் இளம் பெண் சிக்கிக்கொண்டிருந்த நிலையில், பலத்த போராட்டத்தின் மத்தியில் அவரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

பகிரவும்...