Main Menu

கொரோனா சிகிச்சை- புதிய வழி காட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால் வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-

* ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது. 
* கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால் வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும்.
* ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90-க்குள் இருந்தால் கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம். 

* ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழே குறைந்திருந்தால் மட்டும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம். 
* 90-க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும். 
* 3 வகைகளாக நோயாளிகளைப் பிரித்து சிகிச்சை முறையைத் தொடர வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பகிரவும்...