Main Menu

ஹொங்கொங்க் போராட்டங்களுக்கு எதிராக சீன ஆதரவாளர்கள் பேரணி!

ஹொங்கொங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், குறித்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகவும், ஹொங்கொங் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்தும் சீனர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது, நூற்றுக்கணக்கான சீன சார்பு ஆதரவாளர்கள் இன்று (சனிக்கிழமை) ஹொங்கொங்கில் திரண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், தங்கள் இதயங்களின் அடிப்பகுதியில் இருந்து, ஹொங்கொங் குடிமக்களுக்காக கலவரக்காரர்களை எதிர்த்துப் போராடுவதில் பொலிஸாரை ஆதரிப்பது சரியான விடயம் என சீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன். கலவரக்காரர்களுக்குப் பயந்து மௌனமாக இருக்கும் எல்லா மக்களும், ‘போராட்டங்கள் பொதும்’ என்று குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில், சீன மற்றும் ஹொங்கொங் கொடிகளை ஏந்தியவாறு சீன ஆதரவாளர்கள் நகரின் சட்டமன்றம் மற்றும் பொலிஸ் தலைமையக பகுதியில் கூடியிருந்தனர். அதில் சிலர் ‘நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்’ என்ற பதாதைகளை ஏந்தியவாறு பொலிஸாரை ஆதரித்து கோஷமிட்டனர்.

நன்றி reuters.

பகிரவும்...