Main Menu

வன்முறை இல்லாத வாக்கெடுப்புக்கு ஐரோப்பிய தேர்தல் கண் காணிப்பாளர்கள் அழைப்பு !

அநுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, வன்முறை இல்லாத தேர்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் உறுப்பினர் மரிசா மத்தியாஸ், இந்த சம்பவங்கள் தொடர்பாக திங்கட்கிழமை முழு அறிக்கையை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பகம் எந்த தீர்மானத்தையும் எடுக்காது என்று அவர் கூறினார்.

எனவே எந்தவொரு வன்முறையும் இல்லாத ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் முக்கியத்துவத்தையும் மத்தியாஸ் வலியுறுத்தினார்.

பகிரவும்...