Main Menu

ஸ்பெயினில் கருணை கொலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல்

வருகிற ஜூன் மாதம் முதல் இந்த கருணை கொலை சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது சாரி கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது.

எனவே இதுபோன்றவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் கூட்டம் ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 202 எம்.பி.க்கள் வாக்களித்தனர். எதிராக 140 வாக்குகள் பதிவாகின.

வருகிற ஜூன் மாதம் முதல் இந்த கருணை கொலை சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது சாரி கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதற்கு தீவிர வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் ஆட்சி அமைக்கும் போது இந்த கருணைக்கொலை சட்டத்தை நீக்குவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...