Main Menu

ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு?

ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக சாதனை அளவை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளுக்கான வருடாந்திர புள்ளிவிபரங்கள், வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.
இதில் அதிகப்படியான இறப்புகளின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடக்கநிலை மற்றும் கொவிட் தொற்றுநோய் 2020ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் 2019ஆம் ஆண்டில் சுமார் 1,264பேர் இறந்தனர். இது ஒட்டுமொத்தமாக பிரித்தானியாவை விட மூன்று மடங்கு அதிகம்.

நெருக்கடியைச் சமாளிக்க அமைக்கப்பட்ட ஸ்கொட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் கேட்ரியோனா மாதேசன், ‘அதிகப்படியான மருந்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய அதிகரிப்பு அதிகரிக்கும்’ என கூறினார்.

பகிரவும்...