Main Menu

வெளியானது தி.மு.க. தேர்தல் அறிக்கை – 500 வாக்குறுதிகள் உள்ளடக்கம்!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதையடுத்து இன்று (சனிக்கிழமை) தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். வேட்பாளர் பட்டியலை கதாநாயகன் என கூறுகின்றனர். தேர்தல் அறிக்கை மூலம் 2வது கதாநாயகனை வெளியிடுகிறேன்.

500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள், வாக்குறுதிகளாக உள்ளன. கருணாநிதி சொல்வதைபோல் செய்வதை சொல்வோம். சொல்வதை செய்வோம்.

உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க அரசு அரைகுறையாக நடத்தியுள்ளது. அதனை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கலைக்க மாட்டோம் ” என தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற விபரங்கள்:

  • உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
  • அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இடஒதுக்கீடு 30இல் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
  • தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும்.
  • சட்டம் ஒழுங்கு பணியில் உயிரிழந்த பொலிஸ் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
  • கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
  • நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனைபட்டா
  • சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் குழாய் மூலம் குடிநீர்
  • அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
  • கடலோர பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயற்படுத்தப்படும்
  • இந்து ஆலுயங்களில் குடமுழுக்கு, புனரமைப்புக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மசூதி, தேவாலயம் சீரமைக்க 200 கோடி ரூபாய்
  • 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்
  • 500 இடங்களில் கலைஞர் உணவகம்
  • மீனவர்களுக்கு 2 இலட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
  • பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்
  • கடன்சுமையை சரிப்படுத்த தனிக்குழு அமைக்கப்படும்
  • புதிதாக 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்
  • வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வழங்கப்படும்.
  • அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்
  • பகுதி நேர ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள்
  • முக்கியமான மலைக்கோயில்களில் அனைத்திலும் ரோப் கார் வசதி
  • கிராமப்புற பூசாரிகள் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்
  • நீட் தேர்வை இரத்து செய்ய முதல் சட்டசபை தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்
  • முதல்பட்டதாரிகளக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை
  • பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையினருக்கு தனி ஆணையம். ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் அதிகரிக்கப்படும்
  •  200 தடுப்பணைகள் கட்டப்படும்
  • ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை அறிக்கையை விரைந்து பெற நடவடிக்கை
  • மத்திய அரசு பள்ளிகள் அனைத்திலும் அனைத்து பள்ளிகளிலும் 8 ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க சட்டம்
  • விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட்
  • இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு
  • பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்
  • தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம்
  • இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு அமைக்கப்படும்
  • திருச்சி, மதுரை, சேலம், கோவையில் மெட்ரோ ரயில்
  • சிறுகுறு விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்
  • பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க சைபர் பொலிஸ் நிலையம் அமைக்கப்படும்
  • வேலூர், ஒசூர், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம்
  • பள்ளி மாணவர்களுக்கு காலை பால் வழங்கப்படும்
  • கூட்டுறவு வங்கியில் 5 பவுன் உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக வழங்கப்படும்.
  • அரசு உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்.
  • தி.மு.க.இவின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
பகிரவும்...