Main Menu

முழு அதிகாரமும் அடங்கிய 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் குறித்து பேச்சு – சுரேஷ்

காணி, பொலிஸ் என அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்டதான 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர் இன்று (சனிக்கிழமை) தமிழர் தரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிகளை யாழில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல வடக்கு – கிழக்கு இணைப்பு குறித்து இந்தியா கவனத்திற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறினார்.

மேலும் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானநிலைய செயற்பாடுகள், காணி அபகரிப்புக்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீண்டும் கண்காணிப்படுத்தல் போன்ற விடயங்களும் இதன்போது பேசப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் கல்வி குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...