Main Menu

வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா

தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில், 160 பேர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக அரசைக் கண்டித்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதில் கலவரம் ஏற்பட்டது.

அரசின் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி 3 அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் தியாப், தனக்கு முன்பு இருந்த ஊழல் அரசியல்வாதிகளே வெடி விபத்திற்கு காரணம் எனவும், லெபனான் மக்களை இறைவன் காப்பாற்றுவார் எனவும் தெரிவித்தார்.

பகிரவும்...