Main Menu

விமான விபத்து குறித்து எந்த ஊகங்களையும் தெரிவிக்க வேண்டாம்: உக்ரேன் ஜனாதிபதி வேண்டுகோள்

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமான விபத்து குறித்து, எந்த ஊகங்களையும் தெரிவிக்க வேண்டாம் என உக்ரேன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரானின் தெஹ்ரானில் இருந்து கையவ் சென்ற விமானத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 170 இற்க்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்த உக்ரேன் இன்ரர்நஷனல் ஏயார்லைன்ஸின் PS752 விமானம், நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளானது.

ஆனால், இந்த விமானத்தின் இயந்திரம் செயலிழந்ததனால் விமானம் விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தெஹ்ரானில் உள்ள உக்ரைனின் தூதரகம் மற்றும் ஈரானிய அரச தொலைக்காட்சி ஆகியன குறிப்பிட்டுள்ளன.

எனினும், இந்த விமானம் ஈரானால் தாக்கப்பட்டது என பல வதந்திகள் பரபரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமான விபத்து குறித்து எந்த யூகங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று உக்ரேன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விமான விபத்து பற்றி யூகங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.

பகிரவும்...