Main Menu

வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள்

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது 158 சட்ட  மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முன்னையஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது  இத்தடவை  ஜனாதிபதி தேர்தலை மிகவும் குறைந்தளவு வன்முறை  சம்பவங்களும் சட்டமீறல்களும் இடம்பெற்ற தேர்தல்  என  குறிப்பிட முடியும் என்று சுதந்திரத்திற்கும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பின்  பணிப்பாளர் ரோஹன  ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.  

ஜனாதிபதி தேர்தல்  வாக்களிப்பு இன்று காலை 7 மணி தொடக்கம்  மாலை 5 மணிவரை இடம்பெற்றது. அதன் பின்னர்  கொழும்பில்  அமைந்துள்ள பெப்ரல்  அமைப்பின்  தலைமையகத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே  அவர் இதனை  தெரிவித்தார்.  

அவர்  மேலும்  கூறியதாவது   , 

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பெப்ரல்  அமைப்பின் 5 ஆயிரம்  அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆயினும் இன்று வாக்களிப்பு  பணிகளை  கண்காணிப்பதற்காக    சுமார் 6 ஆயிரம்  அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அதேவேளை நடமாடும் கண்காணிப்பு  நடவடிக்கைகளுக்காக  சுமார்  320 இற்கும் அதிகமான அதிகாரிக்கள் கடமையில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன், 150  அதிகாரிகள் தேர்தல்  வாக்கெண்ணும்  பணிகளை  கண்காணிப்பதற்காக பணிகளில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்  300  இக்கும்   அதிகமான  சர்வதேச  கண்காணிப்பாளர்கள்  கண்காணிப்பு நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருந்தனர்..  அத்துடன்,  சர்வதேச  கண்காணிப்பாளர்களின்  நான்கு  குழுக்கள் தேர்தல்  கண்காணிப்பு  பணிகளுக்காக   நாட்டிற்கு  வருகை  தந்நதிருந்தனர்.

அவர்களுடைய  கண்காணிப்பு  நடவடிக்கைகளுக்கு  அமைய    இந்த ஜனாதிபதி  தேர்தல்  மிகவும்  அமைதியான  முறையில்  இடம் பெற்றதாக  குறிப்பிட்டிருந்தனர்.இந்த  தேர்தலை  அமைதியான  முறையில்  நடத்துவதற்கு  தமது ஒத்துழைப்பை  வழங்கிய  அனைத்து  தரப்பினருக்கும்  எமது நன்றிகளை  தெரிவித்துக்கொள்கின்றோம். 

சர்வதேச  கண்காணிப்பாளர்கள்   திருப்திகரமான  கருத்துக்களையே  வெளியிட்டிருந்தனர். 

இருப்பினும்  காலை  7  மணிதொடக்கம்  மாலை 5  மணிவரையான  காலப்பகுதியில் 158 சட்டமீறல்  சம்பவங்கள்  பதிவாகியிருந்தன. 

துப்பாக்கி  பிரயோகம்  

புத்தளத்திலிருந்து  மன்னாருக்கு  வாக்காளர்களை  ஏற்றிசென்ற   பஸ்வண்டியின்  மீது  துப்பாக்கிபிரயோகம்  மேற்கொண்ட  சம்பவமொன்று இன்று அதிகாலையில்  பதிவாகியிருந்தது.  இருப்பினும் இதன்  போது  எவருக்கும்  காயமோ  ,  உயிரிழப்போ   ஏற்பட்டிருக்கவில்லை.  

இரு  தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதில்  ஒரு சம்பவம்  அவிசாவளை  பகுதியில்  இடம் பெற்றிருந்ததுடன்,  அந்த சம்பவம் தொடர்பில்  இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன்,  வெலிமடை  – உடவெலிய  பகுதியிலும்  இன்னொரு  சம்பவம்  இடம் பெற்றது, இதில்   தாக்ககுதலுக்கு  உள்ளான  நபர்  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வன்முறை  

பாரிய வன்முறை  சம்பவங்கள்  எதுவும் பதிவாகவில்லை  என்பதுடன்,  மன்னார் பகுதியில்  மாத்திரம்   போக்குவரத்துக்கு  இடையூறாக  வீதியின்  நடுவே  மரமொன்றை   வெட்டி  போட்டிருந்த  சம்பவமொன்று  பதிவாகியிருந்தது.  

ஆயினும் ,  அந்த  வீதியின்  போக்குவரத்து நடவடிக்கைகள்    சிறிது  நோரத்தில்  வழமைக்கு  கொண்டுவரப்பட்டது. அத்துடன், பூஜாபிட்டிய  , வெல்லவாய , புத்தளம், தம்பதெனிய களனி  ஆகிய  பகுதிகளில்  தேர்தலுக்காக  சட்டவிரோதமதான  முறையில்  வாகனங்களில்  வாக்காளர்களை  ஏற்றி சென்ற   சம்பவங்கள ;சில   பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்கள்  தொடர்பில்  ஒருவர்  கைது  செய்யப்பட்டிருந்தார்.

மாத்தளை , கண்டி  , அம்பாறை  , பொலநறுவை அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு , இரத்மலானை    ஆகிய  பகுதிகளில்  வாக்காளர்களை    குறிப்பிட்ட  கட்சி சார்ந்தவருக்கு  வாக்களிக்குமாறு  மிரட்டிய  சம்பவங்கள்  பல  பதிவாகியுள்ளன. 

அதேபோல்  , வாக்காளர்கள்  வாக்குச்சீட்டை  புகைப்படம்  எடுத்த சம்பவங்கள் நான்கு  பதிவாகியுள்ளன.  வாக்கு  ச்சீட்டில்  புள்ளடியிட்ட பின்னர்  வாக்குச்சீட்டை  புகைப்படம்  எடுத்த குற்றச்சாட்டின்  பேரில் இந்த சம்பவங்களுடன்  தொடர்புடைய  நான்று  பேர்   கைது செய்யப்பட்டுள்ளனர். 

அநுராதபுரத்திலும்   இவ்வாறாக    வாக்குசீட்டை  புகைப்படம் பிடித்த இன்னெருவர்  கைதான   சம்பவமும் பதிவாகியுள்ளது. 

மொனராகலை,  இரத்தினபுரி  , தெவிநுவர  ,  லக்கல ,ஹோமாகம   ஆகிய  பகுதிகளில்   வாக்களிக்கும்  போது ஆள்  மாறாட்டம்  செய்த  சம்பவங்கள் சில  பதிவாகியுள்ளன. 

அதேபோல்,  பண்டாரகமையில்   மாதிரி வாக்குச்சீட்டை  கொண்டு வந்து வாக்குப்பெட்டியில்  போட்ட சம்பவமொன்று  பதிவாகியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய  நபரும்  உடனடியாக  பொலிசாரினால்  கைது  செய்யப்பட்டார். அத்துடன், மட்டக்களப்பு  பகுதியில்  வாக்காளர்களை  ஏற்றிச்சசென்ற  முச்சக்கரவண்டியொன்றுக்கு  தீமூட்டிய    சம்பவமொன்று  பதிவாகியுள்ளது.

கடந்த  தேர்தல்களை  விடவும்   இந்த  தேர்தலின்  போது  குறைந்தளவு   சட்மீறல்  சம்பவஙகளே  பதிவாகியுள்ளன. அதேவேனை  வாக்களிப்பு  நடவடிக்கைகளும்  சுமுகமான  முறையில்  இடம் பெற்றதுடன்,   பாரியளவிலான  அசம்பாவிதங்கள்  எவையும்  இதன்போது  பதிவாகவில்லை.  

கடந்த தேர்தல்களை விடவும்  இம்முறை  வடக்கு  கிழக்கு  மாகாணங்களில்  85  வீதமானோர் வாக்களிக்களிப்பதற்காக  கலந்து  கொண்டிருந்தமையை  அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

பகிரவும்...