Main Menu

வவுனியா பஸ் நிலைய சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை

வவுனியா பஸ் நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனை சாவடியை விரைவாக அகற்றுவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு.

வவுனியா மாவட்டஅபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இதன்போது வவுனியா பஸ் நிலைய வாயிலில் அமைக்கபட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். 

இது தொடர்பாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ஒருங்கினைப்பு குழுவால் விளக்கம் கோரப்பட்டது. குறித்த சோதனை சாவடியை விரைவாக அகற்றுவது தொடர்பாக நடவடிக்கையினை எடுப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் ஒருங்கினைப்பு குழுவிற்கு தெரிவித்திருந்தார்.

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவத்தை அடுத்தே குறித்த சோதனை சாவடி அமைக்கபட்டிருந்ததுடன் பஸ் நிலையத்திற்குள் செல்லும் பொதுமக்களின் பயணபொதிகள் சோதனை மேற்கோள்ளபட்ட பின்னரே அனுமதிக்கபடுகின்றனர்.

குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து  மூன்று மாதங்கள் கடக்கின்ற நிலையிலும் அது அகற்றபடாமையினால் பயணிகள் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், விசனம் தெரிவித்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...