Main Menu

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்கு வானூர்தியில் மலர் தூவிய விமானப் படையினர்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது.

குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது.

கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பமானது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.

இதன்காரணமாக ஆலயத்தை சூழ இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர்.

பகிரவும்...