Main Menu

வடக்கு செல்­ல த­யா­ராகும் தேசிய மக்கள் சக்தி

மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் புத்­தி­ஜீ­விகள் அமைப்­பினர் வடக்­கிற்­கான விஜ­ய­மொன்றை மேற்கொள்ளவுள்­ளனர்.

தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க அறி­விக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் கொள்கைத் திட்­டங்கள் உள்­ளிட்ட பல்­வே­று­பட்ட விட­யங்­களை வடக்கு மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை செய்­வ­தற்கும், வடக்கு மக்­களின் கோரிக்­கைகள் தொடர்­பான மேல­திக ஆராய்­வு­களைச் செய்­வ­தற்­கா­க­வுமே மேற்­படி புத்­தி­ஜீ­விகள் அமைப்­பினர் அங்கு செல்­ல­வுள்­ளனர். 

வடக்­கிற்கு செல்லும் புத்­தி­ஜீ­விகள் குழுவில் சட்­டத்­த­ர­ணிகள் உபுல் குமா­ரப்­பெ­ரும, அஜித் கல்­லோன, அசோக பீரிஸ் உள்­ளிட்­ட­வர்கள் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இதே­வேளை, மக்கள் விடு­தலை முன்­னணின் மத்­திய குழு உறுப்­பி­னரும் வட­மா­காண விவ­கா­ரங்­களை கையாண்டு வரு­ப­வ­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சே­கரன், மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் வடக்கு தமிழ் மக்­க­ளுக்கும் இடை­யி­லான புரி­தல்கள் சம­கா­லத்தில் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­ட­தோடு தமிழ் மக்கள் பிர­தான கட்­சி­க­ளுக்கு  வாக்­க­ளிப்­ப­தற்கு எந்­த­வி­த­மான நியா­யமும் இல்லை என்றும் கூறினார். 

அத்­துடன் எதிர்­வரும் தேர்­தல்­களில் வடக்கு மக்கள் ,மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை தாம் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...