Main Menu

ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 28 பேர் பலி

லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.

லிபிய அதிபராக இருந்த மும்மர் கடாஃபி, 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பின் அங்கு வலுவான அரசு எதுவும் அமையவில்லை. ஐ.நா. ஆதரவு பெற்ற தேசிய அரசுக்கு எதிராக, லிபியா தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சிப் படை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் திரிபோலியில் உள்ள ராணுவப் பள்ளியின் மீது நேற்று நடைபெற்ற வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதி முழுவதும் உயிரிழந்தவர்களின் உடல்களும், துண்டான உடல் பாகங்களும் சிதறிக் கிடந்தன.

மேலும் பலர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசுக்கு ஆதரவாக லிபியாவில் துருக்கிப் படைகளை நிறுத்த உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பகிரவும்...