Main Menu

ரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் உயிரிழப்பு!

ரஷ்யாவின் கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 14 மாலுமிகள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை ரஷ்ய பிராந்திய கடற்பரப்பில் வைத்து கப்பல் அளவீடுகளை மேற்கொண்டிருந்த போது, ஏற்பட்ட தீப்பொறிகள் காரணமாக அங்கு தீ விபத்து இடம்பெற்றுள்ளது. கப்பலின் வகை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு எந்த விபரங்களையும் வௌியிடவில்லை.

எனினும், அது விசேட நடவடிக்கைகளுக்காக பயன்படும், அணு சக்தியினால் இயங்கக் கூடிய சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அத்துடன் விபத்து இடம்பெற்ற தருணத்தில் மொத்தமாக எத்தனை கடற்படை உறுப்பினர்கள் அதில் இருந்தார்கள் என்பது குறித்து அமைச்சு தகவல் வௌியிடாத போதும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாலுமிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ரஷ்யாவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்தநிலையில், தீ விபத்தினை அடுத்து குறித்த நீர்மூழ்கி ரஷ்யாவின் வடக்கு கடற்பிராந்தியத்தில் உள்ள செவிரோமோர்ஸ்க் கடற்படை முகாமில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை தளபதியின் தலைமையின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...