Main Menu

யாழில் அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தின்போது நிவர் மற்றும் புரேவி தாக்கத்தினால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்டது.

கூட்டத்தில் மேலதிக அரசாங்க அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுகாதார துறையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...