Main Menu

மெற்றோ பயணச் சிட்டை விலை அதிகரிப்பு

மெற்றோ பயணச்சிட்டை €2 யூரோக்களால் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வரும், IDF Mobilités (இல்-து-பிரான்சுக்கான பொது போகுவரத்து துறை) தலைவருமான Valérie Pécresse இதனை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

2019 ஆண்டு இறுதியில் இருந்து இந்த விலை அதிகரிப்பு கொண்டுவரப்படும் என அவர் அறிவித்துள்ளார். தற்போது €14.90 களில் உள்ள மெற்றோ பயணச்சிட்டை இவ்வருட இறுதியில் இருந்து 16.90 யுரோக்களை தொட உள்ளது.  நவம்பர் 1, 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த விலை அதிகரிப்பு கொண்டுவரப்படும் என சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த விலை அதிகரிப்பில் கிடைக்கும் வருவயில் தொடருந்து பாதுகாப்பு குறித்த விடயங்களை அதிகரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  தவிர, OrlyBus மற்றும் RoissyBus சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட உள்ளன. OrlyBus சேவைக்கு ஒரு யூரோக்களும், RoissyBus சேவையில் 1.50 யூரோக்கள் விலையும் அதிகரிக்கப்பட உள்ளன.

பகிரவும்...