Main Menu

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார் சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (26) பிற்பகல் 3.00 மணி அளவில் கூடியது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அநேகமானோரின் விருப்பம் கட்சியில் பிளவு ஏற்படாதவாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே என தெரிவித்த பிரதமர், கொள்கையின் அடிப்படையில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அதன்படி, பெரும்பான்மை ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கு உள்ளதாக தெரிவித்த பிரதமர், ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை வெற்றிப் பெறும் முறை தொடர்பில் கலந்துரையாட வேண்டும் எனவும் செயற்குழு கூட்டத்தில் கூறியுள்ளார்.

பகிரவும்...