Main Menu

மெக்சிகோவிலுள்ள தேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை!

மெக்சிகோவிலுள்ள தேவாலயம் ஒன்றில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பாதிரியார்களால் குறைந்தது 175 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேவாலயத்தில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரிக்கப்பட்டது. இதில், 175 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானமை தெரியவந்துள்ளது.

அந்த தேவாலயத்தை உருவாக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும் 60 குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரைத் தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாதிரியார் மேசியலை, போப் பதினாறாம் பெனடிக், கடந்த 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமலேயே மேசியல் கடந்த 2008ஆம் ஆண்டு மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...