Main Menu

மெக்சிகோவின் ஜனாதிபதி இல்லத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு 4 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவின் ஜனாதிபதி அரண்மனைக்கு அருகே நேற்று (சனிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்றபோது மெக்ஸிகோவின் ஜனாதிபதி வேறு இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய தெருவில், ஆயுதமேந்திய நபர் தன்னை விடுவிப்பதற்காக ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆயுதமேந்திய நபரை கட்டிடத்தில் இருந்த இரண்டு பேர் எச்சரித்தமையினால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் இதன் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது நான்கு பேர் கட்டிடத்தின் முற்றத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் துப்பாக்கி தாரியை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பகிரவும்...