Main Menu

இன்றும் தொடரும் போக்குவரத்து தடை! – 10 வழி மெற்றோக்கள் முற்றாக தடை

கடந்த மூன்று நாட்களை தொடருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காம் நாளும் போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளன.  தங்களது கோரிக்கையில் விடப்பிடியாக இருக்கும் SNCF மற்றும் RATP தொழிற்சங்கங்கள், நான்காவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.  TGV, Ouigo மற்றும் Transilien ஆகிய சேவைகளில் ஆறில் ஒரு தொடருந்து மாத்திரமே இயங்க உள்ளது. Intercités மற்றும் TER சேவைகளில் பத்தில் ஒரு தொடருந்து மாத்திரமே இயங்க உள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தை பிற்போடும் படி SNCF தரப்பில் கோரப்பட்டுள்ளது.  

 RATP சேவைகளிலும் முன்னேற்றம் இல்லை. 1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோ வழமை போன்று எவ்வித தடையும் சந்திக்காமல் இயங்கும். RER A சேவை முற்றாக தடைப்படும் எனவும், RER B  சேவைகள் பலமாக பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 மெற்றோக்களில்  2, 3, 3bis, 5, 6, 7bis, 10, 11, 12 மற்றும் 13  இலக்க சேவைகள் முற்றாக தடைப்படுகின்றன. மீதமான இரண்டு சேவைகளான 4 ஆம் மற்றும் 7 ஆம் இலக்க மெற்றோக்கள் நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் ஒன்று எனும் கணக்கில் சேவையில் இருக்கும்.  பேருந்து மற்றும் ட்ராம் சேவைகள் மூன்றில் ஒன்று எனும் கணக்கில் சேவையில் இருக்கும். 

பகிரவும்...