Main Menu

மூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு!

பெர்லினில் மூடப்படும் அபாயத்திலிருந்த பிரபல நிர்வாண நடன விடுதி ஒன்றைக் காப்பாற்ற, பழமைவாத மற்றும் குடும்பப்பாங்கான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளுங்கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பெர்லினிலுள்ள கிட் காட் விடுதி வாசலில் எப்போதும் மக்கள் கூட்டம் வரிசையில் நிற்கும்.

மழையோ, வெயிலோ, பார்ட்டி விரும்பிகள் அதற்குள் நுழைந்து, ஆடம்பர உடைகளுடனோ, வண்ணமயமான உள்ளாடைகளுடனோ அல்லது உடையே இல்லாமலோ நடனமாட காத்துக் கிடப்பார்கள்.

1994இல் திறக்கப்பட்ட கிட் காட் விடுதி, அதன் சுதந்திரமான உடை கட்டுப்பாட்டுக்காக? மட்டுமின்றி அங்கு நடனம் ஆடும் இடத்திலேயே பாலுறவு கொள்ளவும் அனுமதிக்கப்படுவதாலும் மிகவும் பிரபலமானதாகும். ஆனால், அதற்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.

ஏனென்றால், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதன் வாடகை ஒப்பந்தங்களை புதுப்பிக்காததோடு, பல முறை ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதாக மிரட்டியும் வந்துள்ளார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம், பழமைவாத மற்றும் குடும்பப்பாங்கான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளுங்கட்சியான ஏஞ்சலா மெர்க்கலின் CDU கட்சி, விடுதிக்கு உதவ முன்வந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்கட்சியின் அரசியல்வாதிகளில் ஒருவரான பெர்லினைச் சேர்ந்த Christian Goiny, கிட் காட் மூடப்படுவது ஒரு இழப்பும், கெட்ட அறிகுறியும் ஆகும் என்று கூறியுள்ளார்.

அது நல்லதா கெட்டதா என்றெல்லாம் இல்லாமல், நகரத்துக்கும் சமுதாயத்துக்கும் விடுதி கலாச்சாரம் முக்கியம் என்று மட்டும் பார்க்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

விடுதிகளில் 100 முதல் 200 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அதில் பொருளாதார நோக்கமும் உள்ளது என்று கூறுகிறார் அவர்.

இதுபோக, அரசு மேற்கொண்ட ஆய்வு ஒன்று, பெர்லினுக்கு வரும் மூன்று சுற்றுலாப்பயணிகளில் ஒருவர் விடுதிகளை விரும்பி வருவதாக தெரிவித்துள்ளது. 2018இல் மட்டும், விடுதிகளால் அரசுக்கு 1.48 பில்லியன் யூரோக்கள் வருமானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...