Main Menu

ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா!

ரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவரை நட்டை விட்டு வெளியேற்ற, பதிலுக்கு, பழி வாங்குவோம் என ரஷ்யா சூளுரைத்துள்ளது.

ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த Zelimkhan Khangoshvili (40) என்பவர் பெர்லினிலுள்ள பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இருமுறை தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் Vadim S.(49) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த நபர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் ஒரு துப்பாக்கி, மாறு வேடமிட பயன்படுத்தப்பட்ட ஒரு விக் முதலான பொருட்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த ஒரு நதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

அத்துடன், Vadim மாஸ்கோவிலிருந்து பாரீஸ் வழியாக பெர்லினுக்கு வந்ததற்கான ஆதாரங்களும் சிக்கின.

எனவே, செஷன்ய ராணுவத்தில் ரஷ்யாவுக்கு எதிராக போராடிய முன்னாள் ராணுவ வீரரான அவரது கொலை, ரஷ்யாவின் திட்டமிட்ட சதி என ஜேர்மன் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஆனால் ரஷ்யா இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவரை ஜேர்மனி நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

அதனால் ரஷ்யா ஆத்திரமடைந்துள்ள நிலையில், தங்களுக்கும் Khangoshvili கொலைக்கும் தொடர்பில்லை என்றும், ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்றும் ரஷ்ய செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...