Main Menu

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1 வருட சிறை- சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும்  அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத  சிறைத்தண்டனை விதித்துள்ளது.

13 வருடங்கள்  அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு  போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன் 300000 அமெரிக்கடொலர் பெறுமதியான  பரிசுப்பொருட்களை பெற்றார் என குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசதரப்பு ஆறுஏழுமாதசிறைத்தண்டணையை கோரிய போதிலும் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சரின் குற்றங்களின் அளவையும் அவை பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஏற்படுத்திய பாதிப்பையும் கருத்தில்கொள்ளும் போது ஆறுஏழு மாத சிறைத்தண்டனை போதுமானதல்ல என நீதிபதி  தெரிவித்துள்ளார்.

பொதுநிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே திறமையான நிர்வாகத்திற்கான அடித்தளம் என தெரிவித்துள்ள நீதிபதி தனிப்பட்ட அரசாங்க  ஊழியர் நேர்மை பொறுப்புக்கூறல் தரத்திற்குகுறைவாக வீழ்ச்சியடைந்துவிட்டார் என்ற என்ற தோற்றப்பாடு பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

சிறந்த வருமானம் வழங்கப்படும் செயறதிறன் மிக்க அதிகாரிகளை கொண்ட வலுவான சுத்தமான ஆட்சி என தங்களை பற்றி பெருமிதம் கொண்டிருந்த சிங்கப்பூர் மக்களிற்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் ஊழல் அற்ற முதல் ஐந்து நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என கடந்த வருடம் டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்திருந்தது.

இறுதியாக 1975 இல் சிங்கப்பூர் அமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.