Main Menu

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமர் இருந்த மன்மோகன் சிங், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்தவர். அத்துடன் மத்திய நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...