Main Menu

மாதம் ஒன்றுக்கு சிகரெட் புகைக்க €207 யூரோக்கள் செலவு! – புதிய ஆய்வு

புகைப்பழக்கம் கொண்ட ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக €207 யூரோக்களை புகைப்பதற்காக செலவு செய்கிறார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

தனி நபர் ஒருவர் வருடம் ஒன்றுக்கு €2,484 யூரோக்கள் சிகரெட்டுக்காக செலவு செய்கிறதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வரும் ‘l’Alliance contre le tabac’ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலேயே இது தெரியவந்துள்ளது.

பிரான்சில் சிகரெட் விலை அதிகரித்துள்ள போதும், இளைஞர்களிடையே சிகரெட் மோகம் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரான்சில் சிகரெட் புகைப்பதால் வரும் ஒன்றில் 75,000 மரணங்கள் நிகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...