Main Menu

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்

கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகள் குறித்து விடேச கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாகம-மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் 10ஆவது வருட நிறைவு விழா நிகழ்வில் காணொளி ஊடாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், இலவச கல்வி சேவையினை மேம்படுத்த அரசாங்கம்  உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள பாடசாலைகள் அனைத்தையும் தரமுயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என குறிப்பிட்ட பிரதமர் தற்போது கல்வித் துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாணவர்களை பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பகிரவும்...